நான் எவ்வாறு ஒரு கதைசொல்லியாக வரமுடியும்?
உங்களது சுயவிபரக் கோவையையும் காணொளி கதையையும்hello@citizensconnect.lkஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். அதன் பின்னர் நீங்கள் எமது இணையத்தளத்திற்கு கதைகளை தயாரிப்பதற்கு உதவும் வகையில் நாம் உங்களை தொடர்புகொள்வோம்.மோஜோ கதை தயாரிப்பில் எனக்கு அனுபவம் இல்லை. அவ்வாறாயின், கதைகளை தயாரிப்பதில் நான் பங்கேற்க முடியுமா?நிச்சயமாக! ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கான தொடர்ச்சியான மோஜோ பயிற்சிகளை நாம் வழங்குகின்றோம். அடுத்த பயிற்சிநெறி குறித்து நீங்கள்hello@citizensconnect.lkஎன்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு கேட்கலாம். பின்னர், மோஜோ கதைகளை உருவாக்குவதற்கு அவசியமான திறன்களை விருத்திசெய்துகொள்ளும் வகையில், எமது பயிற்சிகளில் பங்கேற்கலாம்.உங்கள் இணையத்தளத்தில் எனது காணொளிகளை வெளியிடும்போது எனக்கு கொடுப்பனவு கிடைக்குமா?
ஆமாம்! ஆரம்பத்தில் ஒவ்வொரு காணொளிக்கும் 15,000 ரூபாய் வழங்கப்படும். CitizensConnect ஆனது, கட்டணம் வழங்கும் கட்டமைப்பொன்றை கொண்டுள்ளது. இதன்மூலம், நீங்கள் தயாரிக்கும் காணொளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும். குறித்த அமைப்பு நிலை வருமாறு:
நிலை 1: முதல் 10 காணொளிகள் – ஒரு காணொளிக்கு 15,000 ரூபாய்
நிலை 2: 10-24 காணொளிகள்: ஒரு காணொளிக்கு 20,000 ரூபாய்
நிலை 3: 25-50 காணொளிகள்: ஒரு காணொளிக்கு 30,000 ரூபாய்
நிலை 4: 50இற்கு மேற்பட்ட காணொளிகள் : ஒரு காணொளிக்கு 40,000 ரூபாய்
எம்மிடம் காட்டுவதற்கு ஏதேனும் எண்ணிக்கைகள் உள்ளனவா?
வாராந்தம் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடைகிறோம்.
விடீயோக்களில் 200Kக்கும் அதிகமான சராசரி ஈடுபாடு
நாடெங்கிலும் இருந்து 450இற்கும் மேற்பட்ட கதைசொல்லிகள்
Postal Address: 15 A, 3rd Lane, Koswatta Road, Nawala, Rajagiriya Email :hello@citizensconnect.lk Tele : 0094 11 287 1688